செய்திகள்
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்

மும்பை ஆஸ்பத்திரியில் சரத்பவாருக்கு அறுவை சிகிச்சை

Published On 2021-04-12 19:54 GMT   |   Update On 2021-04-12 19:54 GMT
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்க்கு பித்தப்பையில் இருந்த ஒரு கல் எண்டோஸ்கோபி முறையில் கடந்த மாதம் 30-ந்தேதி அகற்றப்பட்டது.
மும்பை:

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் (வயது 80) பித்தப்பை பாதிப்பால் சமீபத்தில் அவதிப்பட்டார். இதையடுத்து அவருக்கு பித்தப்பையில் இருந்த ஒரு கல் எண்டோஸ்கோபி முறையில் கடந்த மாதம் 30-ந்தேதி அகற்றப்பட்டது. இந்த நிலையில் ஓய்வுக்காக அவர் வீடு திரும்பினார். 2 வாரங்களுக்கு பிறகு லேப்ரோஸ்கோபி முறையில் பித்தப்பையில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி அவர் நேற்று முன்தினம் மீண்டும் மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு நேற்று காலை லேப்ரோஸ்கோபி முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சரத்பவாருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து இருப்பதாகவும், அவர் நல்ல உடன் நலத்துடன் இருப்பதாகவும் தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், மந்திரியுமான நவாப் மாலிக் கூறினார்.
Tags:    

Similar News