செய்திகள்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

மேற்கு வங்க தேர்தல் வாக்குப்பதிவில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் வீடியோ

Published On 2021-04-12 05:00 GMT   |   Update On 2021-04-12 05:00 GMT
மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29 ஆம் தேதி நடைபெறுகிறது.


வாக்குப்பதிவு மையம் ஒன்றில் இரு பெண் வாக்காளர்களுக்கு அங்குள்ள முகவர் வாக்களிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ மேற்கு வங்க மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பெண் வாக்காளர் ஒருவர் வாக்கப்பதிவு இயந்திரம் உள்ள பகுதியில் நிற்கிறார், அவரின் முகவர் போன்று காட்சியளிக்கும் மற்றொரு பெண் நிற்கிறார். வாக்காளர் வாக்கை பதிவு செய்ய முயற்சிக்கும் போது, அவரின் கைகளை பிடித்துக் கொண்டு பின் நின்ற பெண் வாக்களிக்கிறார். இதே போன்று மற்றொரு பெண் வாக்காளருக்கும் அந்த முகவர் செய்கிறார்.



வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், அது மே 2019 வாக்கில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இந்த வீடியோவுக்கும் தற்போதைய சட்டமன்ற தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஏப்ரல் 10 வரை மேற்கு வங்க மாநிலத்தில் நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்று இருக்கிறது. இறுதிக்கட்ட வாக்கப்பதிவு ஏப்ரல் 29 ஆம் தேதி நடைபெறுகிறது.

அந்த வகையில் பெண் வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு மையத்தில் இருக்கும் முகவர் வாக்களிக்கும் வீடியோ இரண்டு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது என உறுதியாகிவிட்டது. 

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News