செய்திகள்
மத்திய படைகள் வருகை

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலுக்காக கூடுதலாக மத்திய படைகள் குவிப்பு

Published On 2021-04-11 20:33 GMT   |   Update On 2021-04-11 20:33 GMT
மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதுவரை நான்கு கட்ட தேர்தல்கள் முடிந்துவிட்டன.
புதுடெல்லி:

மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில் நான்கு கட்ட தேர்தல்கள் முடிந்துவிட்டன. அங்கு ஏற்கனவே ஆயிரம் கம்பெனி மத்திய படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.

இதற்கிடையே, நேற்று முன்தினம் நடந்த வாக்குப்பதிவின்போது, துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலியானார்கள். இதையடுத்து, கூடுதலாக மத்திய படைகளை அனுப்பி வைக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்தை தேர்தல் கமிஷன் கேட்டுக்கொண்டது.

அதை ஏற்றுக்கொண்டு, கூடுதலாக 71 கம்பெனி மத்திய படைகளை அனுப்பி வைக்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ஒரு கம்பெனியில் 120 முதல் 134 பேர் வரை இருப்பார்கள்.

இவர்கள் ஓட்டுப்பதிவுக்கு மட்டுமின்றி, ஓட்டு எந்திரங்கள் வைத்திருக்கும் அறைகள், ஓட்டு எண்ணிக்கை ஆகியவற்றுக்கும் பாதுகாப்பு அளிப்பார்கள். இவர்களுக்கு தேவையான போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிகளை செய்துதருமாறு மாநில அரசை மத்தியஉள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
Tags:    

Similar News