செய்திகள்
ரெம்டெசிவிர்

ரெம்டெசிவிர் ஊசி மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதிப்பு

Published On 2021-04-11 12:20 GMT   |   Update On 2021-04-11 12:20 GMT
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் ஊசி மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனால் மருத்துவமனைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. சில மாநிலங்களில் படுக்கை தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து செலுத்த அதிக அளவில் மருந்து தேவைப்படுகிறது. கொரோனா தொற்றை குணப்படுத்துவதில் ரெம்டெசிவிர் ஊசி மருந்து சிறப்பான வகையில் பயனளிக்கிறது. இதனால் உலகளவில் இந்த மருந்து அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பெரும்பாலான நாட்டிற்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகிறது. தற்போது இந்தியாவில் அதிகமான தேவை இருப்பதால், கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வரும்வரை ரெம்டெசிவிர் ஊசி மருந்து ஊசிக்கு தேவையான மருந்துகள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது.



மேலும், ரெம்டெசிவிர் மருந்து தயாரிக்கும் உள்நாட்டு தயாரிப்பு நிறுவனங்கள், அவர்கள் இருப்பு வைத்திருக்கும் மருந்துகள் மற்றும் வினியோகம் குறித்த விவரங்களை இணைய தளத்தில் வெளியிடவும், மருந்து கண்காணிப்பாளர்கள், அதிகாரிகள் இருப்புகள் குறித்து சரிபார்க்கவும், பதுக்கல் குறித்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.
Tags:    

Similar News