செய்திகள்
அடல் சுரங்கப்பாதை

அடல் சுரங்கப்பாதையில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் வீடியோ

Published On 2021-04-06 05:21 GMT   |   Update On 2021-04-06 05:21 GMT
இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள அடல் சுரங்கப்பாதையில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டதாக கூறி வீடியோ வைரலாகி வருகிறது.


வான்வெளியில் பட்டாசுகள், பல நிற புகை என கொண்டாட்ட களமாக காட்சியளிக்கும் பகுதி ஒன்றின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இமாச்சல பிரதேச மாநிலத்தின் அடல் சுரங்கப்பாதையில் நடைபெற்ற ஹோலி கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்டதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

வைரல் வீடியோ, அனைவருக்கும் ஹோலி வாழ்த்துக்கள், அடல் சுரங்கப்பாதை, ரோடாங், இமாச்சல பிரதேசம் எனும் தலைப்பில் வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை ஆய்வு செய்ததில், அது சவுதி அரேபியாவில் எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.



இந்த வீடியோ 2018 முதல் இணையத்தில் வலம்வருகிறது. மேலும் இந்த வீடியோவுக்கும் ஹோலி பண்டிகைக்கும் எந்த தொடர்பும் இல்லை. அந்த வகையில் வைரல் வீடியோ, அடல் சுரங்கப்பாதையில் எடுக்கப்படவில்லை என்பதும், வீடியோவுக்கும் ஹோலி பண்டிகைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தெளிவாகிவிட்டது. 

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.

Tags:    

Similar News