செய்திகள்
வாக்களிக்க காத்திருந்தவர்கள்.

மேற்கு வங்காளம், அசாமில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

Published On 2021-04-01 01:52 GMT   |   Update On 2021-04-01 01:52 GMT
மேற்கு வங்க மாநிலத்தில் 30 தொகுதிகளில் 19 பெண்கள் உள்பட 171 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தநிலையில், 2-ம் கட்ட வாக்குப்பதிவு  30 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அவற்றில், முதல்-மந்திரி மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியும் அடங்கும். அங்கு அவருக்கு எதிராக பா.ஜனதா சார்பில் முன்னாள் மந்திரி சுவேந்து அதிகாரி களம் காண்கிறார். மேற்கு வங்க மாநிலத்தில் 30 தொகுதிகளில் 19 பெண்கள் உள்பட 171 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.



அதேபோல், வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமிலும் இன்று  2- ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. அசாம் மாநிலத்தில் 39 தொகுதிகளில் 26 பெண்கள் உள்பட 345 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News