செய்திகள்
மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி

மேற்கு வங்காளம் நந்திகிராமில் மம்தாவை நோக்கி ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிட்ட பா.ஜ.க. தொண்டர்கள்

Published On 2021-03-31 00:11 GMT   |   Update On 2021-03-31 00:11 GMT
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில், முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
நந்திகிராம்:

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில், முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து, மாநில முன்னாள் மந்திரியும், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பா.ஜனதாவுக்கு இடம்பெயர்ந்தவருமான சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார்.

இந்நிலையில், நந்திகிராமில் நேற்று ஒரு சாலை தேர்தல் பிரசார நிகழ்ச்சி நடத்துவதற்காக மம்தா தனது வாகன அணியுடன் சென்றார். அங்கு அவரைத் தொடர்ந்து, சுவேந்து அதிகாரிக்கு ஆதரவாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, ரேயபாரா என்ற இடத்தில் இருந்து சாலை பிரசார நிகழ்ச்சி நடத்த ஏற்பாடாகி இருந்தது.



மம்தாவின் வாகன அணி, ரேயபாராவை கடந்து சென்றபோது அங்கு அமித்ஷா வருகைக்காக காத்திருந்த பா.ஜ.க. தொண்டர்கள், கட்சிக் கொடியை ஆட்டியபடி ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிட்டனர். சிலர் அவ்வாறு முழக்கமிட்டபடியே மம்தாவின் வாகன அணியைத் தொடர்ந்து ஓட, அவர்களை போலீசார் தடுத்துவிட்டனர்.

இரண்டாவது கட்டத்தில் நாளை (ஏப்ரல் 1) தேர்தலை சந்திக்கும் நந்திகிராம் தொகுதியில் நேற்று பிற்பகலுடன் பிரசாரம் முடிவுக்கு வந்தது.
Tags:    

Similar News