செய்திகள்
ரபேல் போர் விமானம்

பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் விமானங்கள் நாளை இந்தியா வருகை

Published On 2021-03-29 18:32 GMT   |   Update On 2021-03-29 18:32 GMT
வரும் 2022-ம் ஆண்டுக்குள் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 36 விமானங்களை இந்தியாவிற்கு கொண்டுவர மத்திய அரசு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

நவீன போர் விமானமான ரபேல் ஜெட் விமானத்தை கொள்முதல் செய்ய இந்திய அரசு பிரான்ஸ் நிறுவனத்துடன் கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது.

2022ம் ஆண்டுக்குள் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாயில் 36 விமானங்களை இந்தியா கொண்டுவர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக கடந்தாண்டு ஜூலையில் 5 விமானங்கள் நம் நாட்டுக்கு வந்து சேர்ந்தன. அதைத் தொடர்ந்து நவம்பரில் 3 விமானங்கள் வந்தன. இந்தாண்டு ஜனவரி 27ல் மேலும் 3 விமானங்கள் வந்து சேர்ந்தன.

இந்நிலையில், நான்காவது கட்டமாக மேலும் 3 போர் விமானங்கள் ஒப்படைக்கப்பட உள்ளன. அவை, பிரான்சில் இருந்து புறப்பட்டு வரும் 31-ம் தேதி காலை அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப் படைத்தளத்துக்கு இரவு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 



இந்த விமானத்துக்கு தேவையான எரிபொருளை ஐக்கிய அரபு எமிரேட்சின் விமானப் படை விமானம், ஓமன் வளைகுடா பகுதியில் நடுவானில் நிரப்பும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விமானங்களுடன் சேர்த்து நம் விமானப் படையில் ரபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது.
Tags:    

Similar News