செய்திகள்
ஹோலி கொண்டாடிய விவசாயிகள்

போராட்டக்களத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடிய விவசாயிகள் -வீடியோ

Published On 2021-03-29 04:04 GMT   |   Update On 2021-03-29 04:04 GMT
கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டு வேளாண் சட்டங்கள் மூன்றையும் திரும்ப பெற்றால்தான் போராட்டத்தை கைவிட்டு ஊருக்கு செல்வோம் என விவசாயி ஒருவர் தெரிவித்தார்.
காசிபூர்:

வண்ணங்களின் பண்டிகையான ஹோலி பண்டிகை இன்று உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தீமையை நன்மை வெற்றி கொண்டதன் நினைவாக கொண்டாடப்படும் இந்த பண்டிகையின்போது மக்கள் ஒருவர் மீதொருவர் வண்ணப்பொடிகளை தூவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். 

ஆலயங்களில் நடைபெறும் ஹோலி கொண்டாட்டங்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. கடவுள்களின் வேடமிட்டு வந்துள்ள பக்தர்கள் பலர், பக்தி பாடல்களுக்கு நடனமாடி மகிழ்கின்றனர். 

இந்நிலையில், வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி-உத்தர பிரதேச எல்லையான காசிபூரில் போராடி வரும் விவசாயிகள், இன்னல்களுக்கு மத்தியிலும் இன்று ஹோலி கொண்டாடினர். வாத்தியங்களை இசைத்து உற்சாமாக பாடல் பாடி நடனமாடினர். 


எங்கள் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டு வேளாண் சட்டங்கள் மூன்றையும் திரும்ப பெற்றால்தான் போராட்டத்தை கைவிட்டு ஊருக்கு செல்வோம் என விவசாயி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News