செய்திகள்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

டெல்லி துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்

Published On 2021-03-28 20:48 GMT   |   Update On 2021-03-28 20:48 GMT
டெல்லியில் எந்தவொரு நடவடிக்கையையும் நிறைவேற்றும் முன் துணைநிலை ஆளுநரின் கருத்தையும் டெல்லி அரசு கேட்க வேண்டும் என்பதே என்சிடி மசோதாவாகும்.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க வகை செய்யும் தேசிய தலைநகர் டெல்லி (திருத்த) மசோதா - 2021 (என்சிடி மசோதா) பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த சில தினங்களுக்கு முன் நிறைவேற்றப்பட்டது. 

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. டெல்லியில் எந்தவொரு  நடவடிக்கையையும் நிறைவேற்றும் முன்னர் துணைநிலை ஆளுநரின் கருத்தையும் டெல்லி அரசு கேட்கவேண்டும் என்பதை இந்த மசோதா கட்டாயமாக்குகிறது.

இந்நிலையில், என்சிடி மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம் மசோதா சட்டமாகியுள்ளது.  

இந்த சட்டம் எப்போது அமலுக்கு வரும் என்பது பற்றி மத்திய உள்துறை அமைச்சகம் இனி அறிவிக்கை வெளியிடும். டெல்லியில் துணைநிலை ஆளுநருடன் அதிகார மோதலில் ஈடுபட்டு வந்த டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் நிர்வாகத்துக்கு புதிய சட்டம் கடும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 
Tags:    

Similar News