செய்திகள்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு 30ஆம் தேதி இதய அறுவை சிகிச்சை

Published On 2021-03-27 15:22 GMT   |   Update On 2021-03-27 15:22 GMT
நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு மார்ச் 30ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதால் பரிசோதனைக்காக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவர் மேல் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்று மதியம் மாற்றப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

இதுகுறித்து ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நெஞ்சுவலியால் அவதிப்பட்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ராணுவ மருத்துவமனையில் இருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்தனர். இதையடுத்து, மார்ச் 30ஆம் தேதி காலை அறுவை சிகிச்சைக்கு திட்டமிடப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News