செய்திகள்
அமலாக்கத் துறை முன் ஆஜரான மெகபூபா முப்தி

கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கினர் - அமலாக்கப் பிரிவினர் மீது மெகபூபா முப்தி புகார்

Published On 2021-03-26 21:23 GMT   |   Update On 2021-03-26 21:23 GMT
காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி, அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் மீது புகார் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகர்:

காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி மீது சட்டவிரோத பணபரிமாற்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக அவரிடம் ஸ்ரீநகரில் வைத்து அமலாக்கப்பிரிவு இயக்குனரக அதிகாரிகள் நேற்று முன்தினம் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின்போது, அவரது தயக்கத்தையும் மீறி அவரிடம் கட்டாயப்படுத்தி வாக்குமூலத்தில் அமலாக்கப்பிரிவு இயக்குனரக அதிகாரிகள் கையெழுத்து பெற்றதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

இதை அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், இறுதியாக எனது தயக்கத்துக்கு மாறாக, என்னிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து பெற்றனர். இதற்கு விசாரணையின்போது எடுக்கப்பட்ட ரகசிய கண்காணிப்பு கேமரா பதிவு சாட்சியமாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News