செய்திகள்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

அசாம் மாநிலத்தில் எடுக்கப்பட்டதாக கூறி வைரலாகும் வீடியோ

Published On 2021-03-26 05:25 GMT   |   Update On 2021-03-26 05:25 GMT
அசாம் மாநிலத்தில் இளைஞர்கள் தடுப்பு கம்பி முறிந்து திடீரென கீழே விழுந்து விபத்தில் சிக்கியதாக கூறும் வீடியோ வைரலாகி வருகிறது.


கட்டிடம் ஒன்றினுள் இளைஞர்கள் தடுப்பு கம்பி முறிந்ததால், திடீரென கொத்து கொத்தாக கீழே விழும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த கோர சம்பவம் கவுகாத்தியில் அரங்கேறியதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

`கவுகாத்தியில் நான்காவது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் ஏழு மாணவர்கள் உயிரிழந்தனர். கூட்ட நெரிசல் மிக்க பகுதிகளில் மிகவும் கவனமாக இருங்கள். அவர்களின் ஆத்மாவை அல்லாஹ் அமைதியுற செய்யட்டும்' எனும் தலைப்பில் வைரல் வீடியோ பகிரப்படுகிறது. 



வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், அது பொலிவியாவில் உள்ள ஐ ஆல்டோ பல்கலைக்கழகத்தில் இந்த கோர சம்பவம் நடைபெற்றது என தெரியவந்துள்ளது. உண்மையில் இந்த சம்பவம் கவுகாத்தியில் நடைபெற்றதாக கூறிபலர் இதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

இந்த சம்பவம் மார்ச் 2 ஆம் தேதி நடைபெற்று இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் செய்தி குறிப்புகள் இணையத்தில் கிடைக்கின்றன. அந்த வகையில் வைரல் வீடியோ கவுகாத்தியில் எடுக்கப்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News