செய்திகள்
டெல்லி இந்தியா கேட் பகுதி

டெல்லி கவர்னருக்கு கூடுதல் அதிகாரம்... மக்களவையில் மசோதா நிறைவேற்றம்

Published On 2021-03-22 16:15 GMT   |   Update On 2021-03-22 16:15 GMT
டெல்லியில் எந்தவொரு நடவடிக்கையையும் நிறைவேற்றும் முன்னர் துணைநிலை ஆளுநரின் கருத்தையும் டெல்லி அரசு கேட்கவேண்டும் என்பதை இந்த மசோதா கட்டாயமாக்குகிறது.
புதுடெல்லி:

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு மாா்ச் 8 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று கூடிய மக்களவை கூட்டத்தில், டெல்லி கவர்னருக்கு அதிக அதிகாரங்களை வழங்கும்  தேசிய தலைநகர் டெல்லி (திருத்த) மசோதா-2021 நிறைவேற்றப்பட்டது.

காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதா ஏற்கனவே மாநிலங்களவையில்  நிறைவேற்றப்பட்டிருந்தது. 

டெல்லியில் எந்தவொரு  நடவடிக்கையும் நிறைவேற்றும் முன்னர் துணைநிலை ஆளுநரின் கருத்தையும் டெல்லி அரசு கேட்கவேண்டும் என்பதை  இந்த மசோதா கட்டாயமாக்குகிறது.

இந்த மசோதா குறித்து  கருத்து தெரிவித்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ‘இன்று மக்களவையில் ஜிஎன்சிடிடி திருத்த மசோதா நிறைவேற்றப்படுவது டெல்லி மக்களுக்கு அவமானம். இந்த மசோதா, மக்களால் வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடமிருந்து அதிகாரங்களை பறித்து தோல்வி அடைந்தவர்களுக்கு அளிக்கிறது. பாஜக மக்களை ஏமாற்றியுள்ளது’ என கூறினார்.
Tags:    

Similar News