செய்திகள்
தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ராகுல் காந்தி

அசாமில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ராகுல்- முக்கிய அம்சங்கள்

Published On 2021-03-20 13:57 GMT   |   Update On 2021-03-20 13:57 GMT
தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய ராகுல் காந்தி, இது மக்களின் தேர்தல் அறிக்கை என்றும், மக்களின் கோரிக்கைகளை உள்ளடக்கியது என்றும் குறிப்பிட்டார்.
கவுகாத்தி:

சட்டசபை தேர்தல் நடைபெறும் அசாம் மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை ராகுல் காந்தி இன்று வெளியிட்டார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* அசாமில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்வதற்கான சட்டம் கொண்டு வரப்படும். 
* அரசு துறைகளில் 5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
* குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 2000 ரூபாய் வழங்கப்படும்
* ஒரு குடும்பத்திற்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம்
* தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் தினசரி சம்பளம் ரூ.365 ஆக உயர்த்தப்படும்

தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய ராகுல் காந்தி, இது மக்களின் தேர்தல் அறிக்கை என்றும், மக்களின் கோரிக்கைகளை உள்ளடக்கியது என்றும் குறிப்பிட்டார்.

அசாம் மாநிலத்தில் இந்த முறை 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்ட தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. கடைசி கட்ட தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெறுகிறது.

Tags:    

Similar News