செய்திகள்
கொரோனா பரிசோதனை

பெங்களூருவில் கொரோனா வைரஸ் தொற்றும், உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரிப்பு

Published On 2021-03-19 01:57 GMT   |   Update On 2021-03-19 01:57 GMT
பெங்களூருவில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருவது சுகாதாரத் துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
பெங்களூரு :

கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மாநிலத்தில் நேற்று புதிதாக 1,488 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் வைரஸ் தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 9 லட்சத்து 65 ஆயிரத்து 102 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் 8 பேர் நேற்று இறந்தனர். இதன்மூலம் சாவு எண்ணிக்கை 12 ஆயிரத்து 415 ஆக உயர்ந்து உள்ளது. புதிதாக பாகல்கோட்டையில் ஒருவர், பல்லாரியில் 8 பேர், பெலகாவியில் 24 பேர், பெங்களூரு புறநகரில் 26 பேர், பெங்களூரு நகரில் 925 பேர், பீதரில் 53 பேர், சாம்ராஜ்நகரில் 5 பேர், சிக்பள்ளாப்பூரில் 11 பேர், சிக்கமகளூருவில் 13 பேர், சித்ரதுர்காவில் 4 பேர், தட்சிண கன்னடாவில் 64 பேர், தாவணகெரேயில் 6 பேர், தார்வாரில் 18 பேர், கதக்கில் 4 பேர், ஹாசனில் 30 பேர், கலபுரகியில் 59 பேர், குடகில் 2 பேர், கோலாரில் 14 பேர், கொப்பலில் ஒருவர், மண்டியாவில் 13 பேர், மைசூருவில் 49 பேர், ராய்ச்சூரில் 6 பேர், ராமநகரில் ஒருவர், சிவமொக்காவில் 12 பேர், துமகூருவில் 41 பேர், உடுப்பியில் 38 பேர், உத்தர கன்னடாவில் 9 பேர், விஜயாப்புராவில் 46 பேர், யாதகிரியில் 5 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெங்களூரு நகரில் 7 பேர், பீதரில் ஒருவர் என 8 பேர் இறந்தனர். மற்ற 28 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. நேற்று 341 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதனால் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 41 ஆயிரத்து 309 ஆக உள்ளது. 11 ஆயிரத்து 359 பேர் சிகிச்சையில் உள்ளனர். 131 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று 93 ஆயிரத்து 370 பேருக்கு கொரோனா சோதனை நடந்தது. ஒட்டுமொத்தமாக இதுவரை 2 கோடியே 10 லட்சத்து ஒரு ஆயிரத்து 442 பேருக்கு பரிசோதனை நடந்து உள்ளது. நேற்று 7 லட்சத்து 73 ஆயிரத்து 674 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

பெங்களூருவில் நேற்று ஒரேநாளில் 925 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அதுபோல 8 பேர் இறந்து உள்ளனர். இது நகரவாசிகளையும், கர்நாடக அரசையும், சுகாதாரத்துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதுபோல நேற்று ஹாவேரி மாவட்டத்தில் மட்டும் தான் கொரோனாவுக்கு யாரும் பாதிக்கப்படவில்லை என்பதும், மற்ற 29 மாவட்டங்களிலும் கொரோனா அலை வீசி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News