செய்திகள்
கேரள பாஜக தலைவர் சுரேந்திரன்

கேரள பாஜக வேட்பாளர் பட்டியல்: மாநில தலைவர் சுரேந்திரன் 2 தொகுதிகளில் போட்டி

Published On 2021-03-14 11:05 GMT   |   Update On 2021-03-14 11:05 GMT
கேரளாவில் 115 தொகுதிகளில் பாஜக போட்டியிடும் நிலையில், இன்று 112 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி:

கேரள மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் இன்று அறிவித்தார். 112 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பொதுச்செயலாளர் அருண் சிங் பேசியதாவது:-

கேரளாவில் பாஜக 115 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 25 தொகுதிகள் கூட்டணியில் உள்ள 4 கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

மாநில பாஜக தலைவர் சுரேந்திரன், காசர்கோடு மாவட்டம் மஞ்சேஷ்வர், பத்தனம்திட்டா மாவட்டம் கொன்னி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

முன்னாள் மாநில தலைவர் கும்மணம் ராஜசேகரன் நேமம் தொகுதியிலும், டாக்டர் இ.ஸ்ரீதரன் பாலக்காடு தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். கே.ஜே.அலபோன்ஸ் கஞ்சிராப்பள்ளியிலும், சுரேஷ் கோபி திரிச்சூரிலும் டாக்டர் அப்துல் சலாம் திரூர் தொகுதியிலும், டாக்டர் ஜேக்கப் தாமஸ் இரிஞ்சலகுடா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News