செய்திகள்
மெகபூபா முப்தி

15-ந் தேதி, அமலாக்கத்துறை முன்பு மெகபூபா முப்தி ஆஜராக தேவையில்லை - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2021-03-10 19:16 GMT   |   Update On 2021-03-10 19:16 GMT
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

புதுடெல்லி:

காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி ஓராண்டுக்கு மேல் வீட்டுக்காவலில் இருந்த பிறகு சில மாதங்களுக்கு முன்பு விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. வருகிற 15-ந் தேதி, டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் ஆஜராகுமாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் மெகபூபா முப்தி மனு தாக்கல் செய்தார். அதில், வழக்கின் விவரமோ, தான் குற்றம் சாட்டப்பட்டவரா? சாட்சியா? என்ற விவரமோ இல்லை என்று அவர் கூறியிருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் சித்தார்த் மிருதுல், அனுப் ஜெயராம் பாம்பானி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணையை 18-ந் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், 15-ந் தேதி நேரில் ஆஜராகுமாறு மெகபூபாவை வற்புறுத்த வேண்டாம் என்று அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News