செய்திகள்
பாஜகவில் இணைந்த எம்எல்ஏக்கள்

மம்தா கட்சியில் தொடரும் அதிருப்தி... எம்எல்ஏக்கள் மட்டுமின்றி வேட்பாளரும் கட்சி தாவினார்

Published On 2021-03-08 11:46 GMT   |   Update On 2021-03-08 11:46 GMT
திரிணாமுல் காங்கிரசில் பல்வேறு காரணங்களால் பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சில அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
கொல்கத்தா:

மேற்கு வங்காள சட்டப்பேரவை தேர்தலில், மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் 291 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு காரணங்களால்  பல எம்எல்ஏக்கள் மற்றும் சில அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் பலர் அதிருப்தியில் உள்ளனர். அவர்களின் ஆதரவாளர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். 

ஏற்கனவே அதிருப்தி தலைவர்கள் பலர் பாஜக பக்கம் தாவிய நிலையில், தற்போது வேட்பாளர் தேர்வில் ஏற்பட்ட அதிருப்தியும் பாஜகவுக்கு சாதகமாக மாறியிருக்கிறது. 

இதனை உறுதிப்படுத்தும் வகையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் சோனாலி குகா, திபேந்து பிஸ்வாஸ், ரவீந்திரநாத் பட்டாச்சார்யா, ஜாது லகிரி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சரளா முர்மு (ஹபிபூர்) ஆகியோர் இன்று பாஜகவில் இணைந்தனர். மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் மற்றும் சுவெந்து அதிகாரி, முகுல் ராய் ஆகியோர் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். 
Tags:    

Similar News