செய்திகள்
கோப்புப்படம்

இன்று, சர்வதேச மகளிர் தினம் : விவசாயிகளின் போராட்டக்களத்துக்கு பொறுப்பேற்கும் பெண்கள்

Published On 2021-03-07 22:42 GMT   |   Update On 2021-03-07 22:42 GMT
பெண்கள் தினத்தை கொண்டாடும் வகையில் விவசாயிகளின் போராட்டக்களத்தில் மேடையை கையாளுதல், உணவு, பாதுகாப்பு வழங்குதல் போன்ற பணிகளை பெண்களே மேற்கொள்வார்கள்.
புதுடெல்லி:

உலகம் முழுவதும் இன்று (திங்கட்கிழமை) பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பெண்களை கவுரவப்படுத்தும் நிகழ்வுகள், பெண்மையை போற்றும் செயல்பாடுகளை அரசுகளும், அமைப்புகளும் முன்னெடுத்து வருகின்றன. அந்தவகையில் டெல்லி சிங்கு, திக்ரி, காஜிப்பூர் எல்லைகளில் அமைந்துள்ள விவசாயிகளின் போராட்டக்களங்களுக்கு பெண்களே பொறுப்பேற்கிறார்கள்.

இது குறித்து சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் உறுப்பினரும், வேளாண் தலைவர்களில் ஒருவருமான கவிதா குருகிராந்தி கூறுகையில், ‘பெண்கள் தினத்தை கொண்டாடும் வகையில் விவசாயிகளின் போராட்டக்களத்தில் மேடையை கையாளுதல், உணவு, பாதுகாப்பு வழங்குதல் போன்ற பணிகளை பெண்களே மேற்கொள்வார்கள். மேலும் சிங்கு எல்லையில் சிறிய பேரணி நடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளன’ என்று கூறினார்.

இதைப்போல மற்றொரு வேளாண் அமைப்பு தலைவரான குல்வந்த் சிங் சாந்து கூறும்போது, ‘பெண்கள் தினத்தையொட்டி அரியானா, பஞ்சாப் மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 10 ஆயிரம் பெண்கள் போராட்டக்களத்துக்கு வருகின்றனர். வேளாண் சமூகத்தில் பெண்களும் மிகப்பெரிய பங்களிப்பை அளித்து வருகின்றனர். உண்மையில் அவர்கள் ஆண்களை விட அதிகம் உழைக்கின்றனர். ஆனால் அவர்கள் போதுமான அங்கீகாரம் பெறவில்லை’ என்று தெரிவித்தார்.
Tags:    

Similar News