செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா பரவல் அதிகரிப்பு- மராட்டியத்துக்கு மத்திய குழு விரைகிறது

Published On 2021-03-07 01:42 GMT   |   Update On 2021-03-07 01:42 GMT
மராட்டியம் விரைகிற குழுவுக்கு மத்திய சுகாதார துறையின் பேரிடர் மேலாண்மை பிரிவின் மூத்த மருத்துவ அதிகாரி தலைமை தாங்குகிறார் என தகவல்கள் கூறுகின்றன.
புதுடெல்லி:

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் குறிப்பிடத்தக்க மாநிலங்களாக மராட்டியமும், பஞ்சாப்பும் உள்ளன.

மராட்டியத்தில் தற்போது 90 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும், பஞ்சாப்பில் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோரும் கொரோனா பாதிப்பில் இருந்து மீள தொடர் சிகிச்சை பெறுகின்றனர். இந்த நிலையில் இவ்விரு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பை குறைப்பதற்காக அங்குள்ள மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுவதற்காக மத்திய அரசு உயர் மட்ட அளவிலான நிபுணர் குழுவை அனுப்பி வைக்கிறது.

மராட்டியம் விரைகிற குழுவுக்கு மத்திய சுகாதார துறையின் பேரிடர் மேலாண்மை பிரிவின் மூத்த மருத்துவ அதிகாரி பி.ரவீந்திரன் தலைமை தாங்குகிறார் என தகவல்கள் கூறுகின்றன. இந்த மத்திய நிபுணர் குழு, கொரோனா பரவல் தீவிரமாக உள்ள பகுதிகளுக்கு சென்று, அதன் காரணத்தை கண்டறிந்து தீர்வு காண உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News