முத்தூட் குரூப் தலைவர் எம்.ஜி. ஜார்ஜ் முத்தூட் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.
நாட்டில் வங்கி சாரா தங்கக் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களில் ஒன்று முத்தூட் பைனான்ஸ். இந்த நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் எம்.ஜி. ஜார்ஜ். அவர் உடல்நலக் குறைவால் நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 72.
இந்திய ஆர்த்தோடக்ஸ் சர்ச்சின் டிரஸ்டியாக செயல்பட்ட அவர் இந்திய வர்த்தக மற்றும் தொழிற்சாலைகளுக்கான கூட்டமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
இதேபோல், இந்திய வர்த்தக மற்றும் தொழிற்சாலை கூட்டமைப்புக்கான கேரள மாநில கவுன்சில் தலைவராகவும் அவர் இருந்துள்ளார்.
கடந்த ஆண்டு போர்ப்ஸ் நாளிதழின் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்ற 6 மலையாளிகளில் ஜார்ஜ் முத்தூட்டும் ஒருவர் ஆவார்.