செய்திகள்
வைரல் புகைப்படம்

பாஜக-வில் இணைந்ததால் அப்படி நடந்ததாக கூறி வைரலாகும் புகைப்படம்

Published On 2021-03-05 05:27 GMT   |   Update On 2021-03-05 05:27 GMT
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ-க்கள் பாஜக கட்சியில் இணைந்த பின் ஏற்பட்ட சம்பவத்தில் எடுக்கப்பட்டதாக கூறி புகைப்படம் வைரலாகி வருகிறது.


புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஐந்து எம்எல்ஏ-க்கள் மற்றும் திமுக கட்சி எம்எல்ஏ ஒருவர் பாஜக கட்சியில் இணைந்தனர். இதன் காரணமாக அங்கு காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்தது.

இந்த நிலையில், போலீஸ் மற்றும் பொது மக்களிடையே மோதல் போன்று காட்சியளிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் காங்கிரஸ் எம்எல்ஏ பாஜக கட்சியில் இணைந்ததால், காங்கிரஸ் கட்சியினர் அவரை தாக்கிய போது எடுக்கப்பட்டதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

பாஜக கட்சியில் இணைந்த புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ-வை காங்கிரஸ் கட்சியினர் தாக்கினர் எனும் தலைப்பில் வைரல் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.



புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்த சம்பவம் நாடு முழுக்க பேசு பொருளாக மாறியது. எனினும், வைரல் பதிவுகளில் உள்ளது போன்ற தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாக எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. மேலும், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜக கட்சியில் இணைந்த எம்எல்ஏ, காங்கிரஸ் கட்சியினரால் தாக்கப்படவில்லை என புதுச்சேரி பாஜக பிரிவு தெரிவித்து இருக்கிறது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News