செய்திகள்
அகிலேஷ் யாதவ்

மின்னணு வாக்கு எந்திரங்கள் மீது யாருக்கும் நம்பிக்கையில்லை - அகிலேஷ் யாதவ்

Published On 2021-03-04 15:13 GMT   |   Update On 2021-03-04 15:13 GMT
எங்கள் கட்சியினர் மட்டும் எங்களுக்கு வாக்களித்தாலே நாங்கள் ஜெயித்து விட முடியும் என்று சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
லக்னோ:

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வரும் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சியாக இருக்கும் சமாஜ்வாதிக் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க இப்போது இருந்த பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில்,  ஜான்ஸி நகரில் சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.  அப்போது அவரிடம் மின்னணு வாக்கு எந்திரங்கள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில்,

மின்னணு வாக்கு எந்திரங்கள் மீது யாருக்கும் நம்பிக்கையில்லை. அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில்கூட வாக்குச்சீட்டு முறை தான் பயன்படுத்தப்பட்டது. வாக்குச்சீட்டு முறையில் தான் தேர்தல் நடத்தப்பட்டு, பலநாட்களாக வாக்குகள் எண்ணப்பட்டன. ஆனால் இவிஎம் வாக்கு எந்திரங்களுக்கு எதிராக இப்போது சண்டையிட முடியாது.

நாங்கள் இப்போது சட்டப்பேரவைக்குத் தயாராகும் வகையில் பல்வேறு பயிற்சிகளை நடத்தி வருகிறோம். எங்கள் கட்சியினர் மட்டும் எங்களுக்கு வாக்களித்தாலே நாங்கள் ஜெயித்து விட முடியும், பாஜகவைத் தோற்கடிப்போம். மாநிலத்தில் சமாஜ்வாதிக் கட்சி ஆட்சி அமைந்தபின், மின்னணு வாக்கு எந்திரத்தை ஒழிக்கும் முதல் கட்சியாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.
Tags:    

Similar News