செய்திகள்
பாஜக

பிரியங்கா மக்களை குழப்புகிறார்- பாஜக குற்றச்சாட்டு

Published On 2021-03-03 07:29 GMT   |   Update On 2021-03-03 07:29 GMT
பிரியங்கா மக்களை குழப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்று மாநில பா.ஜனதா தலைவரும், மந்திரியுமான ஹிமாந்த பிஸ்வா கூறியுள்ளார்.

புதுடெல்லி:

தமிழ்நாட்டுடன் அசாம் மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு பிரியங்கா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

நேற்று முன்தினமும், நேற்றும் அசாமின் வட பகுதியில் அவர் பிரசாரம் செய்தார். அப்போது பா.ஜனதாவை கடுமையாக விமர்சித்தார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும். 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். தேயிலை தோட்ட தொழிலாளர் சம்பளம் உயர்த்தி வழங்கப்படும். தேசிய குடியுரிமை சட்டம் அமல்படுத்துவது நிறுத்தப்படும் என்று பேசினார்.

இதுதொடர்பாக மாநில பா.ஜனதா தலைவரும், மந்திரியுமான ஹிமாந்த பிஸ்வா கூறியதாவது:-

காங்கிரஸ் எல்லாவற்றிலுமே தாமதமாக செயல்படுவது வாடிக்கையான ஒன்று. அந்த வகையில் பிரியங்காவும் தாமதமாக அசாம் பக்கம் வந்துள்ளார்.

பல திட்டங்களை செய்யப்போவதாக அவர் அறிவித்து இருக்கிறார். அசாம் மாநிலத்தில் நீண்டகாலமாக காங்கிரஸ் தான் ஆட்சியில் இருந்தது. அப்போது ஏன் இதை எல்லாம் செய்யவில்லை.

அவர் அறிவித்த திட்டங்கள் எல்லாம் வெற்று வாக்குறுதி. அவர் மக்களை குழப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். காங்கிரசால் மறுபடியும் அசாமில் ஆட்சிக்கு வரமுடியாது. அசாம் மக்கள் எப்போதோ காங்கிரஸ் மீது வெறுப்பு அடைந்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News