செய்திகள்
சந்திரபாபு நாயுடு

போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு : விமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடு தர்ணா

Published On 2021-03-02 00:30 GMT   |   Update On 2021-03-02 00:30 GMT
முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார்
திருப்பதி:

ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசை கண்டித்து எதிர்க்கட்சியான தெலுங்குதேசம் கட்சி திருப்பதி உள்ளிட்ட இடங்களில் நேற்று போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தது. இதில் கலந்துகொள்வதற்காக அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சந்திரபாபுநாயுடு நேற்று விமானம் மூலம் ரேனிகுண்டா விமான நிலையத்திற்கு வந்தார்.

போராட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படாததால், அவரை விமான நிலையத்தில் போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் அவருடன் வந்த கட்சி நிர்வாகிகளும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த சந்திரபாபுநாயுடு, ‘நான் பிரதான எதிர்க்கட்சி தலைவர். 14 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்துள்ளேன். நான் போராட்டத்தில் பங்கேற்பதை ஏன் தடுத்து நிறுத்துகிறீர்கள்’ என்று கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த தகவல் அறிந்த கட்சி நிர்வாகிகள் திருப்பதி, ரேனிகுண்டா உள்ளிட்ட பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News