செய்திகள்
ஜிஎஸ்டி

பிப்ரவரியில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் வசூல் 1.13 லட்சம் கோடி ரூபாய்

Published On 2021-03-01 12:39 GMT   |   Update On 2021-03-01 12:39 GMT
பிப்ரவரி மாதத்தில் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 143 கோடி ரூபாய் மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வருவாய்த்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மத்திய, மாநில அரசுகளுக்கு வர வேண்டிய ஜிஎஸ்டி வருவாய் வெகுவாக குறைந்தது. தளர்வுகள் அறிவித்தபின் ஜிஎஸ்டி வருவாய் அதிரிக்க தொடங்கியது.

கடந்த மாதம் (பிப்ரவரி 1-ந்தேதியில் இருந்து பிப்ரவரி 28-ந்தேதி வரை) மொத்த ஜிஎஸ்டி வருவாய் ஒரு லட்சத்தை தாண்டி 1,13,143 கோடி ரூபாய் வசூலானதாக வருவாய்த்துறை அறிவித்துள்ளது.

மத்திய ஜிஎஸ்டி 21,092 கோடியும் எனவும், மாநில ஜிஎஸ்டி 27,273 கோடி எனவும், ஐஜிஎஸ்டி (Integrated Goods and Services Tax) 55253 கோடி ரூபாய் (24382 கோடி ரூபாய் சரக்கு இறக்குமதியில் கிடைத்தது உள்பட) மற்றும் செஸ் 9525 கோடி ரூபாய் (சரக்கு இறக்குமதி மூலம் 660 கோடி ரூபாய்) வருவாய் வசூலிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News