செய்திகள்
சந்திரபாபு நாயுடு தர்ணா

திருப்பதி விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து சந்திரபாபு நாயுடு தர்ணா

Published On 2021-03-01 09:56 GMT   |   Update On 2021-03-01 09:56 GMT
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதி விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பதி:

ஆந்திராவில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, இன்று சித்தூர் புறப்பட்டார். திருப்பதி விமான நிலையத்தில் இறங்கிய அவர் கார் மூலம் சித்தூர் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், திருப்பதி விமான நிலையத்தில் இருந்து அவர் சித்தூர் செல்வதற்கு போலீசார் அனுமதிக்கவில்லை. விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தினர். 

இதனால் கடும் அதிருப்தி அடைந்த சந்திரபாபு நாயுடு விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சந்திரபாபு நாயுடுவை சித்தூர் செல்ல அனுமதித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உருவாகும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மாநிலத்தில் சுற்றுப்பயணம் செல்வதற்கு உரிமை இல்லையா? என அக்கட்சியின் மாநில தலைவர் கேள்வி எழுப்பி உள்ளார். ஆளுங்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர்கள் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார். 

மேலும், நாயுடு வருகையையொட்டி சித்தூர் மாவட்ட தெலுங்குதேசம் கட்சி தலைவர்களை வீட்டுக்காவலில் வைத்தது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறினார்.
Tags:    

Similar News