செய்திகள்
லாக் செய்யப்பட்டுள்ள கோ-வின் செயலி

கொரோனா தடுப்பூசி போட கோ-வின் இணையதளத்தில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்

Published On 2021-03-01 06:28 GMT   |   Update On 2021-03-01 06:28 GMT
கொரோனா தடுப்பூசி போடுவதற்காக கோ-வின் செயலியில் பயனர்கள் நேரடியாக பதிவு செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

நாடு முழுவதும் இன்று இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. 60 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் இணை நோய்கள் உள்ள 45 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதற்காக கோவின் செயலி மற்றும் இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால், கோவின் செயலியை பொதுமக்கள் டவுன்லோடு செய்து அதன்மூலம் முன்பதிவு செய்ய முடியவில்லை. செல்போன் எண்ணை பதிவு செய்தால், அதற்கு ஓடிபி வரவில்லை என பலர் புகார் தெரிவித்தனர். அதன்பின்னர் கோ-வின் செயலி லாக் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இதுபற்றி விளக்கம் அளித்துள்ளது. கொரோனா தடுப்பூசி போட விரும்புவோர், கோவின் இணையதளம் (http://cowin.gov.in) மூலமாக பதிவு செய்துகொள்ளவேண்டும் என்றும், கோ-வின் செயலியில் பயனர்கள் பதிவு செய்ய முடியாது என்றும் கூறி உள்ளது. பிளே ஸ்டோரில் உள்ள கோ-வின் செயலியை இப்போது நிர்வாகிகள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் கூறி உள்ளது.
Tags:    

Similar News