செய்திகள்
மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்

குளிர்காலம் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு - தர்மேந்திர பிரதான்

Published On 2021-02-26 20:04 GMT   |   Update On 2021-02-26 20:04 GMT
குளிர்காலம் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு உள்ளது என பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் மதிப்பை அடிப்படையாக வைத்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மட்டுமின்றி சமையல் எரிவாயு சிலிண்டர் விலையையும் தீர்மானிக்கின்றன. அந்தவகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி மாற்றியமைக்கப்படுகிறது.

தமிழகத்தில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐத் தொட உள்ளது. மற்ற மாநிலங்களில் ரூ.100-ஐயும் தாண்டிவிட்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் எதிர்க்கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மத்திய அரசு இதில் உடனடியாகத் தலையிட்டு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், குளிர்காலம் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளது என மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகுத் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் அளித்த பேட்டியில் கூறியதாவது:

சர்வதேச சந்தையில் பெட்ரோலியத்தின் விலை உயர்வு வாடிக்கையாளர்களையும் பாதித்துள்ளது. குளிர்காலம் முடியும் தருவாயில் இருப்பதால் எரிபொருட்களின் விலை சிறிதளவு குறையும். இது ஒரு சர்வதேச விவகாரம். தேவை அதிகரித்திருப்பதால் விலையும் உயர்ந்துள்ளது. இது குளிர்காலங்களில் நடப்பதுதான். இந்தப் பருவ காலம் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை குறையும் என தெரிவித்தார்.
Tags:    

Similar News