செய்திகள்
லட்சுமண் சவதி

பெங்களூருவில் அரசு பஸ் கட்டணத்தை உயர்த்த அரசு ஆலோசனை: லட்சுமண் சவதி தகவல்

Published On 2021-02-26 02:34 GMT   |   Update On 2021-02-26 02:34 GMT
டீசல் விலை உயர்வு காரணமாக பெங்களூருவில் அரசு பஸ் கட்டணத்தை உயர்த்த அரசு ஆலோசித்து வருவதாக துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி தெரிவித்தார்.
பெங்களூரு :

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்த்து கொண்டே சென்ற வண்ணம் உள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. டீசல் விலை உயர்வு காரணமாக கர்நாடக அரசு போக்குவரத்து கழகம், பஸ் கட்டணத்தை உயர்த்துவது குறித்து ஆலோசித்து வருவதாகவும், முதற்கட்டமாக பெங்களூருவில் பி.எம்.டி.சி. பஸ்களின் கட்டணத்தை மட்டும் உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து பெங்களூரு விதானசவுதாவில் நேற்று போக்குவரத்துறை மந்திரியும், துணை முதல்-மந்திரியுமான லட்சுமண் சவதியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெங்களூருவில் அரசு பஸ் கட்டணத்தை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதுபற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. முதல்-மந்திரி எடியூரப்பாவுடன், பெங்களூருவில் அரசு பஸ்களின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படும்.

முதல்-மந்திரி எடியூரப்பா அனுமதி அளித்தால் மட்டுமே பெங்களூருவில் பி.எம்.டி.சி. பஸ்களின் கட்டணத்தை உயர்த்தப்படும். அதே நேரத்தில் கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்களின் கட்டணம் உயர்த்தப்படாது. அதுதொடா்பாக இதுவரை எந்த விதமான ஆலோசனையும் நடைபெறவில்லை.

பெங்களூருவில் பி.எம்.டி.சி. பஸ்களின் கட்டணத்தை மட்டுமே உயர்த்த போக்குவரத்து கழகம் தீர்மானித்துள்ளது. பெங்களூருவில் அரசு பஸ்களால் போதிய வருமானம் கிடைக்கவில்லை. அரசிடம் இருந்து ரூ.80 கோடி கடன் பெற்று டிரைவர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு உள்ளது.

இதற்கு மத்தியில் டீசல் விலை உயர்வு மற்றும் பஸ்களுக்கான உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.780 கோடி தேவைப்படுகிறது. இதற்காக ரூ.556 கோடி கடன் வங்கியில் இருந்து கடன் பெறப்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களால் பஸ் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News