செய்திகள்
நானா படோலே

மத்திய அரசு மக்களிடம் கொள்ளையடிக்கிறது: நானா படோலே குற்றச்சாட்டு

Published On 2021-02-26 01:59 GMT   |   Update On 2021-02-26 01:59 GMT
பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மத்திய அரசு பொதுமக்களிடம் கொள்ளையடிப்பதாக காங்கிரஸ் மாநில தலைவர் நானா படோலே குற்றம்சாட்டி உள்ளார்.
மும்பை :

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது. ஒரு சில பகுதிகளில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தொட்டுள்ளது.

இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே நிருபர்களிடம் கூறியதாவது:-

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக உள்ள போதும், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட்டு வருகிறது. விவசாயிகள் பலன் ரூ.4, நெடுஞ்சாலை மேம்பாடு ரூ.18 என மத்திய அரசு பல்வேறு செஸ் வரிகளை விதித்து உள்ளது. மன்மோகன் சிங் ஆட்சியின் போது இந்த வரிகள் குறைவாகவே இருந்தது.

மராட்டியத்தில் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியில் பெட்ரோல், டீசலுக்கு அதிக வாி விதிக்கப்பட்டது. அவரது 5 ஆண்டு ஆட்சியில் ரூ.11 வரை வரி உயர்த்தப்பட்டது. மகாவிகாஸ் ஆட்சியில் இந்த வரி ரூ.1 மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News