செய்திகள்
முகக்கவசம் இன்றி நடமாடியவர்களிடம் இருந்து அபராதம் வசூல்

புனே: முகக்கவசம் இன்றி நடமாடிய 2.30 லட்சம் பேரிடம் இருந்து ரூ.12.24 கோடி அபராதம் வசூல்

Published On 2021-02-25 03:40 GMT   |   Update On 2021-02-25 03:40 GMT
புனே மாவட்டத்தில் முக கவசம் இன்றி நடமாடியதாக 2.30 லட்சம் பேர் பிடிபட்டு உள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.12 கோடியே 24 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
புனே :

புனே மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து அண்மையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரையில் அத்தியாவசியமின்றி வெளியே நடமாடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க புனே போலீஸ் கமிஷனர் அமிதாப் குப்தா உத்தரவிட்டு உள்ளார். இதன்பேரில் புனே மாநகரில் 42 இடங்களில் சோதனை சாவடி அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

நேற்றுமுன்தினம் இரவு வரை முகக்கவசம் இன்றி வாகனம் ஓட்டியதாக 902 பேர் போக்குவரத்து போலீசாரிடம் பிடிபட்டு உள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 46 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

இதே போல புனே மாநகரில் முகக்கவசம் இன்றி திரிந்த 2 லட்சத்து 28 ஆயிரத்து 560 பேர் பிடிபட்டு உள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.11 கோடியே 6 லட்சத்து 700 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

புனே ஊரக போலீசார் நடத்திய சோதனையில் 793 பேர் முகக்கவசம் இன்றி நடமாடி உள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 97 ஆயிரத்து 800 அபராதம் வசூலிக்கப்பட்டது.

இதன் மூலம் புனே நகர் மற்றும் ஊரக பகுதிகளில் முகக்கவசம் இன்றி நடமாடியதாக 2 லட்சத்து 30 ஆயிரம் பிடிபட்டு உள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.12 கோடியே 24 லட்சத்து 43 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News