செய்திகள்
மத்திய அமைச்சர் ஜவடேகர்

மார்ச் 1-ந்தேதியில் இருந்து 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி: ஜவடேகர்

Published On 2021-02-24 10:55 GMT   |   Update On 2021-02-24 10:55 GMT
மார்ச் 1-ந்தேதியில் இருந்து 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு மத்திய அரசு செலவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த ஆண்டு 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதலில் சுகாதார பணியாளர்களுக்கும், அதன்பின் முன்கள பணியாளர்களுக்கும் போடப்பட்டு வருகிறது. நேற்றைய நிலவரப்படி சுமார் 1.10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது 2-வது டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் வருகிறது மார்ச் 1-ந்தேதியில் இருந்து 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும், 45 வயதிற்கு மேற்பட்ட பல நோய் தாக்கங்களுடன் உள்ள நபர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் வடேகர் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசு மையத்தில் தடுப்பூசி போடுபவர்களுக்கு மத்திய அரசு அதற்கான தொகையை செலுத்தும். 10 ஆயிரம் அரசு மற்றும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் மையத்திலும் தடுப்பூசி போடப்படும். தனியார் மருத்துவமனையில் போட விரும்புவர்களுக்கும், அவர்கள் பணம் செலுத்த வேண்டும். எவ்வளவு பணம் என்பதை சுகாதாரத்துறை அமைச்சர் இன்னும் 3 அல்லது 4 நாட்களில் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம், மருத்துவமனையுடன் கலந்தாலோசித்து தெரிவிக்கும்’’ என்றார்.
Tags:    

Similar News