செய்திகள்
நளின்குமார் கட்டீல்

விவசாயிகள் போராட்டத்திற்கு காங்கிரசே காரணம்: நளின்குமார் கட்டீல் குற்றச்சாட்டு

Published On 2021-02-23 02:07 GMT   |   Update On 2021-02-23 02:07 GMT
டெல்லியில் நடந்த விவசாயிகளின் போராட்டத்திற்கு பின்னணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளின் பங்கு இருப்பது பற்றி நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும் என்று பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் குற்றம் சாட்டியுள்ளார்.
பெங்களூரு :

பெங்களூருவில் பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் நிருபர்களிடம் கூறியதாவது:-

டெல்லியில் கடந்த மாதம் (ஜனவரி) 26-ந் தேதி குடியரசு தினவிழா கொண்டாட்டத்தின் போது விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்கு பின்னணியில் பா.ஜனதா இருப்பதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு கூறி இருக்கிறார். டெல்லியில் நடந்த விவசாயிகளின் போராட்டத்திற்கு பின்னணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளின் பங்கு இருப்பது பற்றி நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும். பா.ஜனதாவுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் நோக்கத்தில் மல்லிகார்ஜுன கார்கே தவறான கருத்தை மக்களிடம் தெரிவித்துள்ளார்.

குடியரசு தினவிழாவின் போது டெல்லியில் பெரிய அளவில் வன்முறை நடைபெற வேண்டும் என்று காங்கிரஸ் எதிர்பார்த்தது. அதன்படியே வன்முறை நடந்திருந்தது. அதுபற்றி பேச மல்லிகார்ஜுன கார்கே மறந்து விட்டார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கலபுரகி தொகுதியில் மல்லிகார்ஜுன கார்கே தோல்வி அடைய காரணம், அவரது கட்சியை சேர்ந்தவர்களே என்று, சத்திய சோதனை கமிட்டியே தெரிவித்திருக்கிறது. இதனை அவர் புரிந்து கொள்ள வேண்டும். தேவையில்லாமல் பா.ஜனதா மீது குற்றச்சாட்டு கூறுவது சரியல்ல. விவசாயிகளுக்கு ஆதரவாக பா.ஜனதா எப்போதும் இருந்து வருகிறது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக பா.ஜனதா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News