செய்திகள்
மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே

கொரோனா அதிகரிப்பு : மராட்டியத்தில் அரசியல், மத கூட்டங்களுக்கு தடை

Published On 2021-02-21 19:50 GMT   |   Update On 2021-02-21 19:50 GMT
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அடுத்த சில நாட்களுக்கு அரசியல் போராட்டம் மற்றும் மத, சமூக, அரசியல் கூட்டங்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை:

மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று டெலிவிஷன் மூலமாக பொதுமக்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு ஊரடங்கு தீர்வாக இருக்க முடியாது. ஆனால் கொரோனா வைரஸ் சங்கிலியை உடைக்க ஊரடங்கு மட்டுமே வழியாக உள்ளது. முககவசம் மட்டும் தான் கொரோனா வைரசில் இருந்து நம்மை காக்கும் ஆயுதம். முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், சுய ஒழுக்கத்தை கடைப்பிடித்தல் ஆகியவை தான் ஊரடங்கை தவிர்க்க உதவும். அடுத்த சில நாட்களுக்கு அரசியல் போராட்டங்களுக்கு அனுமதி கிடையாது. மேலும் மத, சமூக, அரசியல் கூட்டங்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News