செய்திகள்
மத்திய அரசு

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் குழாய்நீர் இணைப்பு உள்ளது - மத்திய அரசு தகவல்

Published On 2021-02-21 00:07 GMT   |   Update On 2021-02-21 00:07 GMT
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் குழாய்நீர் இணைப்பு கொடுக்கப்பட்டு இருப்பதாக ஜல்சக்தி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி:

மத்திய அரசின் ‘ஜல் ஜீவன்’ இயக்கத்தின் கீழ், நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு குழாய்நீர் இணைப்பு வழங்குவதற்காக 100 நாள் சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ‘நோய்கள் பரவுவதை தடுக்க கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்’ என்பதன் அடிப்படையில், பிரதமர் மோடி கடந்த அக்டோபர் மாதம் 2-ந் தேதி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் கீழ் பல மாநிலங்கள் 100 சதவீத இலக்கை அடைந்துள்ளன. அதில் தமிழகமும் இடம்பெற்று உள்ளது. ஆந்திரபிரதேசம், இமாசலபிரதேசம், அரியானா, கோவா போன்ற மாநிலங்களும் 100 சதவீத இலக்கை அடைந்து உள்ளன. சில மாநிலங்கள், இந்த இலக்கை அடைவதற்கு கால அவகாசம் கேட்டு இருப்பதால் மார்ச் 31-ந் தேதி வரை மத்திய அரசு அவகாசம் கொடுத்து உள்ளது.

நாட்டில் இதுவரை மொத்தம் 5 லட்சத்து 21 ஆயிரம் பள்ளிகளுக்கும், 4 லட்சத்து 71 ஆயிரம் அங்கன்வாடி மையங்களுக்கும் குழாய்நீர் இணைப்பு கொடுக்கப்பட்டு இருப்பதாக ஜல்சக்தி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
Tags:    

Similar News