செய்திகள்
கோப்புப்படம்

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி டோஸ்களுக்கு இடையே 3 மாத இடைவெளியை கடைப்பிடித்தால் நல்ல பலன் - ஆய்வில் கண்டுபிடிப்பு

Published On 2021-02-20 22:06 GMT   |   Update On 2021-02-20 22:06 GMT
ஆக்ஸ்போர்டு தடுப்பூசி 2 டோஸ்களுக்கு இடையேயான இடைவெளியை 3 மாதம் (12 வாரங்கள்) வரை நீட்டித்தால் நல்ல பலன் கிடைக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:

கொரோனாவுக்கு எதிராக பயன்பாட்டுக்கு வந்துள்ள தடுப்பூசிகளில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசி முக்கியமானதாகும். இந்தியாவும் இதை ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் தயாரித்து மக்களுக்கு போட்டு வருகிறது. இந்த தடுப்பூசி 2 டோஸ் போட்டுக் கொள்ள வேண்டும்.இதில் முதல் டோஸ் போட்டு 6 வாரங்களுக்குள் 2-வது டோசும் போடப்படுகிறது. ஆனால் இந்த தடுப்பூசியின் செயல்திறன் குறித்து ஆய்வு செய்த ஆய்வாளர்கள், இந்த 2 டோஸ்களுக்கு இடையேயான இடைவெளியை 3 மாதம் (12 வாரங்கள்) வரை நீட்டித்தால் நல்ல பலன் கிடைக்கும் என கண்டறிந்துள்ளனர்.

அந்தவகையில் முதல் டோஸ் தடுப்பூசி போட்ட 22-வது நாளில் இருந்து 3 மாதம் வரை தடுப்பூசி 76 சதவீதம் வரை செயல்திறனை வழங்குவது கண்டறியப்பட்டு உள்ளது. இந்த பயன்பாடு 3 மாதங்களுக்குள் குறையாது எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

தடுப்பூசியின் செயல்திறன் இவ்வாறு இருக்க, அதன் 2 டோஸ்களுக்கு இடையேயான இடைவெளியை 3 மாதம் வரை நீட்டிக்க வேண்டும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஏனெனில் தடுப்பூசி வினியோகம் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே இருப்பதால், அவற்றின் அளவை எவ்வாறு பயன்படுத்தி அதிக பலனை பெறுவது என்பது குறித்து அரசுகள் முடிவு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
Tags:    

Similar News