செய்திகள்
திருப்பதி கோவில்

திருப்பதியில் ரதசப்தமியையொட்டி ரூ 3.48 கோடி உண்டியல் வசூல்

Published On 2021-02-20 08:46 GMT   |   Update On 2021-02-20 08:46 GMT
திருப்பதியில் ரதசப்தமியையொட்டி பக்தர்கள் சார்பில் ரூ.3.48 கோடி காணிக்கையாக செலுத்தப்பட்டது.
திருப்பதி:

திருப்பதியில் ரதசப்தமியையொட்டி நேற்று காலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை 4 மாட வீதிகளில் 7 வாகனங்களில் சாமி வீதி உலா நடந்தது. கடைசியாக இரவு 9 மணிக்கு சந்திரபிரபை வாகனத்தில் ஏழுமலையான் பவனி வந்தார்.

சாமி வீதி விழாவை காண ஏராளமான பக்தர்கள் மாட வீதிகளில் குவிந்திருந்தனர். அவர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் காலை முதல் இரவு வரை டிபன், டீ, காபி, பால், மோர் மற்றும் 1 லட்சம் குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.

மாட வீதிகளில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் டீ, காபி, வழங்கப்பட்ட கப்புகள் அன்னதானம் வழங்கப்பட்ட தட்டுகள் என மொத்தம் 13 டன் குப்பைகளை பக்தர்கள் வீசி சென்றனர்.

அவற்றை தேவஸ்தான ஊழியர்கள் சேகரித்து அகற்றினர்.

ரதசப்தமிக்காக 75 ஆயிரம் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்ட நிலையில் 48,541 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 18,868 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். பக்தர்கள் சார்பில் ரூ.3.48 கோடி காணிக்கையாக செலுத்தப்பட்டது.
Tags:    

Similar News