செய்திகள்
தீபமேற்றி நன்றி தெரிவித்த மக்கள்

தீபங்கள் ஏற்றி வைத்து பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த அசாம் மக்கள்

Published On 2021-02-19 21:53 GMT   |   Update On 2021-02-19 21:53 GMT
அசாமில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தீபங்களை ஏற்றி வைத்தனர்.
திஸ்பூர்:

அசாம் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

அசாமின் துப்ரி, மேகாலயாவின் புல்பரி இடையே பிரம்மபுத்திரா நதியில் ரூ.5,000 கோடியில் புதிய பாலம் கட்ட பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 19 கி.மீ. தொலைவு கொண்ட இந்த பாலம் இந்தியாவின் மிக நீளமான பாலமாக அமையும்.

மேலும், அசாமின் காளிபாரி, ஜோர்கட் இடையிலான 8 கி.மீ.தொலைவு பாலத்துக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இவை தவிர பல்வேறு சிறிய பாலங்கள், சாலைத் திட்டங்கள், சுற்றுலா படகு குழாம்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், அசாம் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பிரம்மபுத்ரா நதியில் அமைந்துள்ள தீவு நகரமான மஜூளி என்ற பகுதியில் உள்ள மக்கள் தீபங்களை ஏற்றி வைத்தனர்.

அதில், அவர்கள் ‘தேங்க் யூ மோடிஜி’ என்ற செய்தியை தீபங்கள் மூலம் வரிசையாக அடுக்கி வைத்து பிரதமர் மோடிக்கு தங்கள் நன்றியை வெளிப்படுத்தினர்.
Tags:    

Similar News