செய்திகள்
பிரதமர் மோடி

அப்போதே இதில் கவனம் செலுத்தியிருந்தால்.... பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் சொல்லும் பிரதமர் மோடி

Published On 2021-02-17 12:53 GMT   |   Update On 2021-02-17 16:20 GMT
இந்தியாவின் எரிசக்தி இறக்குமதியை குறைப்பதில் கவனம் செலுத்தியிருந்தால், நடுத்தர மக்களுக்கு இந்த சுமை இருந்திருக்காது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தமிழகத்தில் ராமநாதபுரம் - தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் திட்டம், சென்னை மணலியில் அமைக்கப்பட்டுள்ள எரிவாயு உற்பத்தி மையம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

மேலும், நாகை பனங்குடியில் அமைய உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு அடிக்கல் நாட்டினார். இந்த புதிய சுத்திகரிப்பு நிலையம் ஆண்டுக்கு 9 மில்லியன் டன் சுத்திகரிப்பு திறன் கொண்டது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல், எரிவாயு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் பெட்ரோல் விலை ரூ. 100-ஐத் தொட்டுள்ளது.

இதுகுறித்து இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி ‘‘நாம் இறக்குமதி சார்ந்து இருக்க முடியுமா?. நான் யாரையும் விமர்சனம் செய்ய விரும்பவில்லை. ஆனால், நான் இதை சொல்ல விரும்புகிறேன். அது என்ன வெனில், முந்தைய அரசு (மத்தியில் காங்கிரஸ் அரசு) இந்தியா எரிசக்கி இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைப்பதில் கவனம் செலுத்தியிருந்தால், நடுத்தர மக்களுக்கு இந்த சுமை இருந்திருக்காது.

2019-2020 நிதியாண்டியால் இந்தியாவில் 85 சதவீதம் ஆயில் இறக்குமதி தேவையும், 53 சதவீதம் எரிபொருள் இறக்குமதி தேவையும் இருந்தது.

எத்தனால் தயாரிப்பு இறக்குமதியை குறைப்பதாக இருக்கும். அதேவேளையில் விவசாயிகளின் வருமானத்திற்கு மாற்று வழியாகவும் இருக்கும்’’ என்றார்.
Tags:    

Similar News