செய்திகள்
கோப்புப்படம்

மும்பையில் மாஸ்க் அணியாதவர்களிடம் 31 கோடி ரூபாய் வசூல்

Published On 2021-02-17 12:10 GMT   |   Update On 2021-02-17 12:10 GMT
கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக மாஸ்க் அணிவது கட்டாயம் என வலியுறுத்திய நிலையில், மும்பை பகுதியில் அதை மீறியவர்களிடம் மும்பை மாநகராட்சி 31 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வேகம் எடுத்தது. நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என ஒவ்வொரு மாநில அரசுகளும் வலியுறுத்தின. சில மாநிலங்கள் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது.

ஆனால் பொதுமக்கள் அதை கண்டுகொள்ளவில்லை. இதனால் பெரும்பாலான மாநிலங்களில் மாஸ்க் அணியாமல் செல்லும் நபர்களுக்கு ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் குறிப்பாக மும்பை பெருநகர் மாநராட்சி பகுதியில் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்ததால், மாஸ்க் அணியாதவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது.


கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து தற்போது வரை மும்பை பெருநகர் மாநகராட்சி சார்பில் மும்பையில் மட்டும் மாஸ்க் அணியாமல் சென்றவர்களிடம் 30,96,21,200 கோடி ரூபாய் அபராதமாக வசூலித்துள்ளது.
Tags:    

Similar News