செய்திகள்
ரவிசங்கர் பிரசாத்

தொலைத்தொடர்பு துறையில் நிதி மோசடிகளை விசாரிக்க டிஜிட்டல் புலனாய்வு பிரிவு - மத்திய அரசு தகவல்

Published On 2021-02-16 02:35 GMT   |   Update On 2021-02-16 02:35 GMT
தொலைத்தொடர்பு துறையில் நிதி மோசடிகளை விசாரிக்க டிஜிட்டல் புலனாய்வு பிரிவு அமைப்பது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

மத்திய தொலைத்தொடர்பு துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் மூத்த அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதில் குறிப்பாக தொலைத்தொடர்பு துறையில் நிதி மோசடிகளை விசாரிக்க டிஜிட்டல் புலனாய்வு பிரிவு அமைப்பது குறித்து முடிவு செய்யப்பட்டது.

இதைப்போல தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களுக்கு தொல்லை கொடுப்பதை நிறுத்த கடும் நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு மந்திரி உத்தரவிட்டார். குறிப்பாக வணிக ரீதியான குறுந்தகவல்கள், அழைப்புகள் மூலம் வாடிக்கையாளர்களை தொல்லைக்குள்ளாக்குவதையும், நிதி மோசடி செய்வதற்கும், கடின உழைப்பால் மக்கள் ஈட்டிய பணத்தை கொள்ளையடிப்பதற்கும் சிலர் தொலைத்தொடர்பு துறையை பயன்படுத்துவதை அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே இதுபோன்ற நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த உறுதியான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டன.
Tags:    

Similar News