செய்திகள்
மந்திரி சோமசேகர்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்: மந்திரி சோமசேகர்

Published On 2021-02-16 02:16 GMT   |   Update On 2021-02-16 02:16 GMT
மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மந்திரி சோமசேகர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு :

ஹாவேரி மாவட்டம் ஹிரேகெரூருவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்தை கூட்டுறவுத்துறை மந்திரி சோமசேகர் மற்றும் விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் நேற்று திறந்து வைத்தார்கள்.

பின்னர் மந்திரி சோமசேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-மந்திரி எடியூரப்பா போராட்ட குணம் கொண்டவர். அவர் எந்த பிரச்சினையும் கண்டு அஞ்சியதில்லை. போராட்டத்தின் மூலமாகவே தலைவரானவர். கர்நாடகத்தின் ராஜாபுலி எடியூரப்பா தான். அவருக்கு 40 ஆண்டுகால அரசியல் அனுபவம் உள்ளது. எந்த பிரச்சினையாக இருந்தாலும் முதல்-மந்திரி எடியூரப்பா சமாளிக்கும் வல்லமை கொண்டவர். அவரது வலியில் விஜயேந்திராவும் சேர்ந்துள்ளார்.

அவருக்கு மாநில மக்களிடையே நல்ல பெயர் உள்ளது. எடியூரப்பாவை போன்று விஜயேந்திராவும் ராஜாபுலியாக வருவார். ஊரடங்குக்கு பின்பு சில வரியை மத்திய அரசு விதித்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.

பி.பி.எல். கார்டு சட்டவிரோதமாக பலர் வைத்திருப்பதாக புகார்கள் வருகின்றன. அதனால் தான் சட்டவிரோதமாக பி.பி.எல். கார்டு வைத்திருப்பவர்கள் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மந்திரி உமேஷ் கட்டி கூறியுள்ளார்.

வசதிப்படைத்தவர்கள் வீட்டில் 4 இருசக்கர வாகனங்கள் இருந்தாலும், பி.பி.எல். கார்டு வைத்திருக்கிறார்கள். இதுபோன்ற புகார்கள் வந்திருப்பதால் இருசக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் பி.பி.எல். கார்டை ஒப்படைக்க காலக்கெடு விதிக்கப்பட்டு இருக்கலாம்.

இவ்வாறுஅவர் கூறினார்.
Tags:    

Similar News