செய்திகள்
பிரியங்கா காந்தி

விவசாயிகள் விரும்பவில்லை என்றால், திரும்பப் பெற வேண்டியதுதானே?- பிரியங்கா காந்தி

Published On 2021-02-15 11:50 GMT   |   Update On 2021-02-15 11:50 GMT
விவசாயிகள் வேளாண் சட்டங்களை விரும்பவில்லை என்று கூறும்போது, மத்திய அரசு அவற்றை திரும்பப் பெற வேண்டியதுதானே என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு வேளாண் சட்டங்களால் விவசாயிகள் நன்மை அடைவார்கள் எனத் தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் விவசாயிகள் மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் எனக் கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில், பிரியங்கா காந்தி கூறுகையில் ‘‘விவசாயிகள் டெல்லி எல்லையில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் 80 நாட்களாக போராடி வருகிறார்கள். தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளது. அவர்கள் எதற்காக உட்கார்ந்து இருக்கிறார்கள்?.

வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என பிரதமர் கூறுகிறார். விவசாயிகள் இந்த சட்டங்கள் வேண்டாம் என்று, அவர்களாகவே கூறும்பொழுது, நீங்கள் அதை ஏன் திரும்பப் பெற மறுக்கிறீர்கள்?’’ என பிரியங்கா காந்தி கேட்டுள்ளார்.
Tags:    

Similar News