செய்திகள்
ராகுல் காந்தி

அசாமில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரத்தை துவக்கி வைத்தார் ராகுல்

Published On 2021-02-14 10:28 GMT   |   Update On 2021-02-14 10:28 GMT
அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரத்தை கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி வைத்தார்.
கவுகாத்தி:

அசாம் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன. பாஜகவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் தேர்தல் வியூகம் வகுத்துள்ளது. அசாமை பாதுகாப்போம் என்ற பெயரில் களப்பணிகளை தொடங்கி உள்ளது. 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரத்தை கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி இன்று துவக்கி வைத்தார். சிவசாகர் மாவட்டத்தில் நடைபெற்ற முதல் கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார்.

முன்னதாக ஜனவரி 23ம் தேதி பிரதமர் மோடி தனது பிரசாரத்தை இதே சிவசாகர் மாவட்டத்தில் இருந்து தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அசாமை பாதுகாப்போம், பிரசார திட்டத்தின்கீழ், காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைத்து தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாட உள்ளனர். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள், மாநிலத்தின் சிவில் சமூக குழுக்கள் போன்ற அனைத்து தரப்பினரையும் சந்தித்து பேசும் அவர்கள், கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்த கருத்துக்களையும் அறிய உள்ளனர். 

இந்த மாதத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி பங்கேற்கும் மூன்று பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாரக் பள்ளத்தாக்கு, வடக்கு அசாம், லோயர் அசாம் ஆகிய பகுதிகளில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
Tags:    

Similar News