செய்திகள்
ராகுல் அஞ்சலி

இந்த நாடே உங்களுக்கு கடன்பட்டுள்ளது... புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீர‌ர்களுக்கு ராகுல் அஞ்சலி

Published On 2021-02-14 03:51 GMT   |   Update On 2021-02-14 03:51 GMT
புல்வாமா தாக்குதல் நடைபெற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தி உள்ளார்.
புதுடெல்லி:

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி, பாதுகாப்பு படையினர் சென்ற வாகனங்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. ஸ்ரீநகர்- ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த தாக்குதலில் 40 பாதுகாப்புப் படையினரும், தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதி ஒருவனும் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி வீரர்களின் உயிர்த்தியாகத்தை பலரும் நினைவுகூர்ந்துள்ளனர். 

புல்வாமா தாக்குதல் நடைபெற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், காங்கிரஸ்  தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,  புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீர‌ர்களுக்கு அஞ்சலி செலுத்துவதுடன், அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதலை தெரிவித்துள்ளார். இந்த நாடே உங்களுக்கு கடன்பட்டுள்ளது என்றும் ராகுல் காந்தி கூறி உள்ளார்.
Tags:    

Similar News