செய்திகள்
சபாநாயகர் ஓம் பிர்லா

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு பயனுள்ளதாக இருந்தது- சபாநாயகர் ஓம் பிர்லா

Published On 2021-02-13 16:50 GMT   |   Update On 2021-02-13 16:50 GMT
மத்திய பட்ஜெட் 2021-2022 குறித்த பொது விவாதத்தில், 117 உறுப்பினர்கள் பங்கேற்றதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.
புதுடெல்லி:

மக்களவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு இன்றுடன் நிறைவடைந்தது. 2வது அமர்வுக்காக மார்ச் 8ம் தேதி வரை மக்களவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.

இந்நிலையில், முதல் அமர்வில் நடைபெற்ற அலுவல்கள் தொடர்பாக சபாநாயகர் ஓம் பிர்லா கூறியதாவது:-

இன்று முடிவடைந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மத்திய பட்ஜெட் 2021-2022 குறித்த பொது விவாதத்தில், 117 உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த விவாதம் 14 மணி 40 நிமிடங்கள் நீடித்தது.

மக்களவையை 50 மணி நேரம் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், 49 மணி நேரம் மற்றும் 17 நிமிடங்கள் நடந்தது. இடையூறுகள் காரணமாக 43 நிமிடங்கள் வீணானது. 49 பெண்கள் எம்.பி.க்கள் உட்பட 117 உறுப்பினர்கள் பங்கேற்றனர். 

நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதல் நேரம் அவை நடத்தப்பட்டது. இடையூறுகளால் வீணான நேரம் இதன்மூலம் ஈடு செய்யப்பட்டுள்ளது. சபையில் ஜனநாயக மற்றும் நெறிமுறை தரங்கள் பராமரிக்கப்படுவதை உறுதி செய்வது அனைத்து உறுப்பினர்களின் பொறுப்பாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News