செய்திகள்
நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

இந்தியாவின் டூம்ஸ்டே மனிதராக மாறுகிறார் ராகுல் காந்தி -மக்களவையில் நிதி மந்திரி கடும் தாக்கு

Published On 2021-02-13 11:15 GMT   |   Update On 2021-02-13 11:15 GMT
பல்வேறு விஷயங்கள் மற்றும் தேசத்தின் வளர்ச்சி பற்றி எதிர்மறையாகவே ராகுல் காந்தி தொடர்ந்து பேசி வருவதாக நிதி மந்திரி குற்றம்சாட்டி உள்ளார்.
புதுடெல்லி:

மத்திய பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் பதில் அளித்து பேசினார். அப்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து பேசியதாவது:

ராகுல் காந்தி நாட்டை இழிவுபடுத்தும் விதமாகவே பேசி வருகிறார். போலியான கட்டுக்கதைகளை உருவாக்கும் ராகுல் காந்திக்கு, குற்றச்சாட்டுகளுக்கு அளிக்கும் பதிலைக் கேட்கும் பொறுமை இல்லை.

அரசியலமைப்புகளில் உயர்ந்த தலைமை வகிப்போர் பற்றி அவதூறாகவும், பல்வேறு விஷயங்கள் மற்றும் தேசத்தின் வளர்ச்சி பற்றி எதிர்மறையாகவே ராகுல் காந்தி தொடர்ந்து பேசி வருகிறார்.

நாட்டின் அழிவுக் காலத்தைப் பற்றியே எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கும் அவநம்பிக்கை மனிதராக (இந்தியாவின் டூம்ஸ்டே மனிதர்) ராகுல் மாறி வருகிறாரோ என அச்சமாக இருக்கிறது. 

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News