செய்திகள்
அஸ்வத் நாராயண்

சமுதாயத்தை மாற்றும் பலம் கல்விக்கு மட்டுமே உண்டு: அஸ்வத் நாராயண்

Published On 2021-02-13 03:33 GMT   |   Update On 2021-02-13 03:33 GMT
வலிமையான மற்றும் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றால் அது கல்வியால் தான் முடியும் என்று துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.
பெங்களூரு :

மண்டியா மாவட்டத்தில் உள்ள ஆதிசுஞ்சனகிரி பல்கலைக்கழகத்தில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-

நாட்டை கட்டமைப்பதிலும், ஒவ்வொருவரின் கனவை நிறைவேற்றுவதிலும் கல்வித்துறையின் பங்கு மிக முக்கியமானது. தரமான கல்விக்கு இருக்கும் பலம் என்ன என்பது அனைவருக்கும் தெரியும். சமுதாயத்தையும், ஒருவரின் வாழ்க்கையைும் மாற்றும் பலம் கல்விக்கு மட்டுமே உள்ளது. இந்த கருத்தை பிரதமர் மோடி எப்போதும் கூறுகிறார். வலிமையான மற்றும் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றால் அது கல்வியால் தான் முடியும்.

அதனால் தான் மாணவர்களுக்கு தரமான கல்வியை கொடுப்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. மேலும் கற்றல் மற்றும் கற்பித்தலுக்கு தேவையான வசதிகளை அரசு செய்து கொடுக்கிறது.

கல்வி என்பது கல்லூரிக்கு வருவது, படிப்பது, தேர்வு எழுதுவது, தேர்ச்சி பெற்று செல்வது என்பதல்ல. மாணவர்களின் வாழ்க்கை இதோடு நின்று விடக்கூடாது. மாணவர்கள் வாரத்திற்கு ஒரு முறையாவது அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று அங்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கவனிக்க வேண்டும். அதை உங்களின் கல்வி மூலம் தீர்க்க முடியுமா? என்று யோசியுங்கள். அப்போது தான் நீங்கள் பெறும் கல்விக்கு உரிய அர்த்தம் வரும்.

இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.
Tags:    

Similar News